கல்வியியல் கல்லூரிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு நியமனங்களை வழங்க வேண்டும் எனவும் இல்லாவிட்டால் எதிர்காலத்தில் பாரிய தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மிக வறுமை நிலையில் கற்றலை நிறைவு செய்த மாணவர்கள் தற்போதும் வறுமை நிலையையே எதிர்கொள்வதாகவும் இந்த ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் திகதிக்கு முன்னதாக அவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும் தற்போது அது பிற்போடப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரச ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஓய்வூதிய வயதெல்லை மாற்றப்பட்ட நிலையில் பல பாடசாலைகளில் ஆசிரியர்கள் தொடர்பில் தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றிடங்களை கல்வியியல் கல்லூரியை நிறைவு செய்த ஆசிரிய மாணவர்களை நியமனம் செய்து நிறைவு செய்ய வேண்டும் எனவும் அவர்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.