வவுனியாவில் இடம்பற்ற சுதந்திர தின நிகழ்வில் மாணவ, மாணவிகள், சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்ட 31 பேர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் முதலுதவிச் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வில் ஒன்றரை மணித்தியாலத்திற்கு மேலாக குறித்த மாணவர்கள், இராணுவத்தினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு தரப்பினர் மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டமையால் வெயில் தாக்கம் காரணமாக 28 மாணவர்களும், 3 சிவில் பாதுகாப்பு படை வீரர்களுமாக 31 பேர் மயங்கமடைந்திருந்தனர்.
உடனடியாக செஞ்சிலுவைச் சங்க தொண்டர்கள் மற்றும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையினர் இணைந்து நோயாளர் காவு வண்டியில் வைத்து முதலுதவிச் சிகிச்சையின் வழங்கியுள்ளனர்.
கடந்த வருடம் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்விலும் இவ்வாறான அனர்த்தம் இடம்பெற்றிருந்தது,
இந்த விடயத்தில், எதிர்காலத்தில் மாற்று வழிகளைச் சிந்திக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.