இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

விக்னேஸ்வரன் ஒரு அரசியல் கோமாளி – எல்லாம் தேர்தல் நாடகம் – கஜேந்திரகுமார் சாடல்!!

Jaffna


.இவ் வாரம் சர்வதேச தமிழ் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இந்தக் குற்றச்சாட்டை மக்களுக்கு அம்பலபடுத்தினார் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இயக்கத் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் .

தமிழரசுக் கட்சி ஊடாக அரசியலுக்குள் வந்த விக்கினேஸ்வரன் அதற்குள் இருந்து கொண்டே தழிழரசுக் கட்சியை விமர்சிக்கும் போது நாம் கூட இவரது தமிழ்தேசிய அரசியல் நாடகத்தை நம்பி எம்முடன் இணையுமாறு அழைப்பு விடுத்திருந்தோம்.


பின்பு இவர் தமிழ் மக்கள் பேரவையை ஆரம்பித்த போது இவர் ஒட்டுக் குழுக்களுடன் ஒன்றிணையும் போது் இவரது தமிழ் தேசிய விரோத போக்கு அறிந்து இவரது கோமாளிக்கூத்துகளை நாம் மக்களுக்கு அம்பலப்படுத்தினோம்.

நாமும் எவருடனும் ஒரு கூட்டும் தேவை யில்லை என ஒரு தெளிவான நிலைப்பாட்டில் உறுதியானோம்.தேவையானால் யாராவது தமிழ் தேசிய தலைவரின் கோரிக்கைகளுடன் பெரும்பாலும் ஒத்திசைவான எமது இயக்க அரசியல் கொள்கையுடன உடன்பட விரும்புவோர் அல்லது அந்தப் பக்குவத்தை அடைந்தவர்கள் தமது கட்சிகளைத் துறந்து எமது இயக்கத்துடன் இணையலாம் என்ற கொள்கையில் நாம் உறுதியாக தற்போது உள்ளோம் எனவும் கஜேந்திரகுமார் மேலும் தெரிவித்தார்.


தேரதல் நாடகத்திற்காக வாக்குகளுக்காக அண்மைக்காலத்தில் எல்லோரையும் தனது தலைமையில் ஒன்றிணைக்கப் போய் இவரது சுயநலத்தை உணர்ந்து கொண்ட உதிரி கட்சிகள் கூட இவரை இணைக்காமல், இப்போது, நாம் ஒட்டுக் குழு என முத்திரை குத்தி, கட்சியில் இருந்து இடைநிறுத்திய E P DP ஆதரவாளர் மணிவண்ணனுடன் மட்டும் இணைந்து தானும் ஒரு ஒட்டுகுழு சார்பானவர் என மேலும் நிரூபித்துள்ளார் விக்னேஸ்வரன். இதனால் இன்று மக்கள் இவரை ஒரு அரசியல் கோமாளியாகப் பாரக்கிறார்கள். இவருக்கு மக்கள் தேரதலில் நல்ல பாடம் புகட்ட வேண்டும் எனவும் கஜேந்திரகுமார் வலியுறுத்தினார் .

Related Articles

Leave a Reply

Back to top button