தமது வீட்டிற்கு மின் கட்டணம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்து புத்தளம் மஹகும்புக்கடவல பகுதியில் மின்மானி வாசிப்பாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சிலாபம் மின்பொறியியலாளர் அலுவலகத்தில் பணியாற்றும் மின்மானி வாசிப்பாளரே இவ்வாறு கட்டையால் தாக்கப்பட்டுள்ளார் எனவும் கடுமையான காயங்களுடன் இவர் சிலாபம் வைத்திய சலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் மேற்கொண்டவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.