மைத்திரிபால சிறிசேன மீது விதிக்கப்பட்ட நஸ்ட ஈடு சொல்லும் தகவல் என்ன ?
அரச கடமையில் தனிப்பட்ட போட்டிகளுக்காக சட்டத்தின் கீழ் விதந்துரைக்கப்பட்ட கடமையை செய்ய தவறுகின்ற ஆட்கள் கூட்டு பொறுப்பு தத்துவத்தின் கீழ் குற்றவாளிகளாவார்.
அரச கடமையின் நிமிர்த்தம் தனிப்பட்ட பொறுப்புகளும் கடமைகளும் நிறைவேற்ற தவறுகின்ற ஆட்கள் நடந்த விளைவுகளுக்கு தனியாகவும் கூட்டாகவும் பொறுப்புக்கூற வேண்டும்.
அரச கடமை என்பது சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பொறுப்பை உரிய வகையில் நிறைவேற்றுதலே ஆகும். அதில் இருந்து விலகுகின்ற விலக எத்தனிக்கின்ற ஆட்கள் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட கூடிய குற்றவாளிகளாவார்.
நிறைவேற்றுத்துறையின் இரண்டு வகைகளான அரசியல் சார்ந்த நிறைவேற்றுத்துறையான அமைச்சவரையின் பணிப்புகள் எதுவாக இருந்தாலும் சட்டத்தின் கீழ் பொதுமக்களை பாதுகாக்கின்ற அல்லது பொதுச்சேவைகளை வழங்குகின்ற பொறுப்பு பொது நிர்வாகத்தின் மேலேயே காணப்படுகின்றது. அதற்கான சட்டரீதியான பொறுப்புக்கூறல் பொது நிர்வாகத்தின் மீது சுமத்தப்படலாம்.
அரச பதவிகளை கவலையீனமாக செய்து மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால்
உரிய பதவியில் இருப்பவரை தண்டிக்க முடியும்.கவனம் அரச அதிகாரிகளே
நன்றி : ஹரிகரன் – அரசியல் ஆசான்