இந்திய ரூபாவைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகின்றது. இலங்கையில் டொலர் கையிருப்பு குறைவடைந்துள்ளமையினால், இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் அதன்படி, முட்டை இறக்குமதியின் போது டொலரைச் செலவிடாமல், இந்திய ரூபாவைப் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
தேநேரம், முட்டை இறக்குமதிக்கான சர்வதேச விலை அடிப்படையிலான விலை மனு கோரல் நடவடிக்கை இன்றுடன் இறுதி செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ அண்மையில் தெரிவித்தார்.
முட்டை இறக்குமதி தொடர்பான பணிகள் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் நிலையில், 20 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் முதல் கட்டமாக 5 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.