Breaking Newsஇலங்கைசெய்திகள்
இளம் ஆசியர்களே நாட்டின் இன்றைய தேவை – கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜெயந்த தெரிவிப்பு!!
Teachers
புதிதாக பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கும் போது 35 வயதுக்கு மேற்பட்டவர்களை நியமிக்குமாறு ஆசிரியர் சேவை யாப்பு குறிப்பிடும் போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களை நியமிப்பதற்கு மூலம் மாணவர்களே பாதிப்படைவர் எனத் தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜெயந்த சிலரின் நலன்களைப் பார்ப்பதா அல்லது 42 லட்சம் மாணவர்களின் நலனைப் பற்றி நினைப்பதா எனவும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இவ்விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் இன்றைய தேவை இளம் ஆசிரியர்கள் தான் எனத்தெரிவித்துள்ள அவர் அப்படியானால், 55 வயது வரை நியமிக்கலாமே எனவும் சிறந்த ஆசியர்களின் கைகளிலேயே 42 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் தங்கியுள்ளது எனவும் கூறியுள்ளார்.