Breaking Newsஇலங்கைசெய்திகள்
அமெரிக்க குடியுரிமைக்காக மீண்டும் முயற்சிக்கும் கோட்டா!!
Gotabaya Rajapaksa

அமெரிக்க குடியுரிமையை மீட்டெடுப்பதற்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விண்ணப்பித்துள்ளார் என தெ ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
முன்னதாக 2019ஆம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கோட்டாபய ராஜபக்ஷ தமது அமெரிக்க குடியுரிமையை துறந்தார்.
இந்தநிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர் என்று கூறப்பட்டு, மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டில் இருந்து வெளியேறியபோது, எந்த நாடும் அவருக்கு புகலிடம் வழங்கவில்லை.
இதனையடுத்தே தனது அமெரிக்க குடியுரிமையை மீட்டெடுப்பதற்கு கோட்டாபய ராஜபக்ஷ விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.