காற்றில் கலந்துள்ள காற்றுமாசுபாடு காரணமாக வடக்கில் பொதுமக்கள் அநாவசியமாக வெளியில் நடமாடுவதை தவிர்ப்பது நல்லது என வடக்கு மாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் திரு. து, சுபோகரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் காணப்படுகின்ற நிறுவனங்களின் அறிக்கையின்படி, கடந்த சில நாட்களாக, வளித்தட சுட்டெண் சற்று அதிகரித்துக் காணப்படுகின்றது. இவ்வாறு காணப்படுவதனால், மக்கள் பொதுவாக அவதானமாக நடமாடுவது நல்லது.
நோயாளிகள், முதியவர்கள், சிறுவர்கள் அநாவசியமாக வெளியில் செல்வதைத் தவித்துக் கொள்வது நல்லது எனவும்
இது அநேகமாக இன்னும் ஒரிரு தினங்களில் ஒரு சாதாரண நிலையை அடையக்கூடிய வாய்ப்புகள் மிகவும் சாத்தியமாக காணப்படுகின்றதாகவும் அவர் கூறினார்.
தற்போதைய காலநிலை மாற்றச் சூழலில் முகக்கவசம் அணிந்து பயணிப்பது மிகவும் நல்லது என தகவல்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.