இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

சுகாதார அமைச்சுவிடுத்துள்ள அறிவுறுத்தல்!

Ministry of Health Sri Lanka

தற்போது இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் நாடளாவிய ரீதியில் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் கூடிய இந்நோய், ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவக்கூடியது எனவும் கொவிட் -19 நோயுடன் ஒப்பிடுகையில், இந்த நோயினால் ஏற்படும் சிக்கல்கள் குறைவாகவே காணப்படுவதாகவும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் சரியான சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுவது அவசியமானது என விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.

நிலைமை மோசமடைந்தால் மாத்திரமே வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button