இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பயங்கரவாதத் தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்படுகிறதா!!

srilanka

அரசாங்கம், பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை முற்றாக நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாக நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் விவகாரங்கள் அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ (Wijeyadasa Rajapaksa) தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை முற்றாக மீளாய்வு செய்து அறிக்கை ஒன்றை வழங்குவதற்காக குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் உறுப்பினர்கள் தற்போது நாட்டில் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பல்வேறு தரப்புடன் இணைந்தும் தனியாகவும் ஆய்வு செய்ய உள்ளனர்.

இதனையடுத்து வழங்கப்படும் அறிக்கைக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதனை தவிர பயங்கரவாதத்தை தடுக்க புதிய சட்ட ஏற்பாடுகளை உருவாக்குவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

சர்வதேச நாடுகளும் மிகப் பெரிய சவாலாக இருக்கும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த பலமாக சட்டங்கள் தேவைப்படுகின்றன.இதனால், அது குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது எனவும் விஜேதாச ராஜபக்ஷ கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button