1.எவ்வளவு கொஞ்சி
எவ்வளவு கெஞ்சனுமோ அவ்வளவும் கொஞ்சி கெஞ்சுவார்கள்.
ஆனால் கேட்க கூடாதென்று முடிவெடுத்தால் எந்த பேச்சையும் கேட்கமாட்டார்கள்.
2.எவ்வளவுக்கெவ்வளவு இலகுவான வார்த்தைகள் வந்ததோ
அவ்வளவுக்கவ்வளவு கடினமான வார்த்தைகளும் ஒருத்தியிடமே வரும்.
3.பார்க்கும் வரை தான் அப்படி பார்த்துக்கொள்வார்கள்.
பார்க்கக்கூடாது என்று முடிவெடுத்தால் ‘எவரையும்’ பார்க்கமாட்டார்கள்.
4.சில மீளவே முடியாத இன்னல்களிலிருந்து ஒரே நாளில் உறுத்தலின்றி வெளியேறி
இன்னொரு உலகத்திற்கு சென்று வரவும் முடியும்..
அதிலியே புழுங்கி வெந்து தணிந்து வேறு இடத்தில் செல்லாமல் அங்கேயே செத்தொழியவும் முடியும்..
5.தன்மான திமிரில் எவரையும் சாராமல்
தன்னை மட்டுமே நம்பி சுயசிந்தனை உடைய பெண்ணாகவும் வாழ முடியும்.
எல்லாவற்றுக்கும் அடங்கி அத்தனைக்கும் தலையை ஆட்டும் அடங்கிய பெண்ணாகவும் வாழ முடியும்.
6.கண்ணீர் சிந்தாமல் அழும் வித்தையை
அறிமுகபடுத்தியவளும் அவள்கள் தான்.
ஊர் அறிய கத்தி கதறி அழுது அனைத்து பார்வையும் தன்மீது விழ வைத்தவளும் அவள்கள்தான்.
7.எல்லா சோகத்தையும் மனதில் ஏற்றிக்கொள்ள முடியாமல் அனைவரிடமும் ஆறுதலுக்காக ஏங்குபவளும் அவள்கள்தான்.
அதே போல, துயரங்களை எல்லாம் வார்த்தையில் வடிக்க முடியாமல் துயருற்ற போதிலும்
தனக்கு தானே ஆற்றி கொள்பவளும் அவள்கள்தான்
8.இதுவும் கடந்து போகும் என உணர்த்தியவளும் அவள்கள்தான்.
எதுவும் மறந்து போகாது என
அனத்தியவளும் அவள்கள்தான்.
9.அடுத்தவரின் பிரச்சனைகளுக்கு
உடனடியாக தீர்வு சொல்பவளும் அவள்கள்தான்.
அதே விஷயம் தனக்கென்று வரும் போது
தீர்வு காணாமல் அழுது புலம்புவளும் அவள்கள்தான்.
10.தலைவலியை பிரளயம் போலவும்
உயிரே போகும் வலியை மிகச் சாதாரணமான எடுத்துக்கொள்ளவும் அவள்களால் மட்டுமே சாத்தியம்.
11.தேவதைகளும்
சாத்தான்களும்
ஒன்றே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம் செயல்களை பொறுத்தே
அவர்களின் அவதாரம்.
Leave a Reply