Uncategorized

கடுமையான தட்டுப்பாட்டில் பரசிட்டமோல் மாத்திரை!!

Paracetamol

சில மருத்துவமனைகளில் பெரசிட்டமோல் மருந்துக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொதுவாக இந்நாட்டில் நோயாளிகளின் சிகிச்சைக்காக 1300க்கும் மேற்பட்ட வகையான மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் 383 வகையான மருந்துகள் அத்தியாவசிய மருந்துகளாகக் கருதப்படுகின்றன என்றும் எனினும் நாட்டில் தற்போது சுமார் 160 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Check Also
Close
Back to top button