உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்தும் சிறந்த தகவல் பரிமாற்ற செயலியாக WhatsApp உள்ளது இந்த நிலையில் தங்களின் பயனர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை WhatsApp வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது வந்துள்ள புதிய அம்சம் குறித்து இப்பதிவில் காண்போம்.
புதிய அம்சம்
WhatsApp செயலியானது கடந்த வாரம் எப்போதும் இல்லாத அளவிற்கு 2 மணி நேரம் முடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயனர்கள் மெட்டா நிறுவனத்திடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
திடீர் முடக்கத்தால் தனிப்பட்ட மற்றும் அலுவலகம் சார்ந்த பணியை செய்ய முடியாமல் பயனர்கள் அவதிக்குள்ளாகினர். இது குறித்து கேட்ட போது தொழில்நுட்ப பிழை என்று நிறுவனம் விளக்கம் அளித்தது.
மேலும் எதிர்காலத்தில் இவ்வாறு நடக்காது என்றும் WhatsApp விளக்கம் அளித்தது. இந்த நிலையில் தனது பயனர்களுக்கு உதவும் வகையில் புதிய அப்டேட்டுகையும் WhatsApp வெளியிட்டு வருகிறது.
அண்மையில் இன்ஸ்டாகிராமை போல எமோஞ்சிகள் மூலம் பதிலளிக்கும் அம்சத்தை கொண்டு வந்துள்ளது. அதனை தொடர்ந்து அவதார் உருவ ஸ்டிக்கர் உருவாக்கும் வசதியையும் அளித்துள்ளது.
தற்போது இது iOS பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைவருக்கும் இந்த வசதி விரிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இனி நாம் தங்களின் சொந்த மொபைல் எண்களுக்கு செய்திகளை அனுப்பும் வசதியை WhatsApp கொண்டு வரவுள்ளது.
தற்போது இந்த அம்சத்தின் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. அதனால் தற்போதைக்கு iOS மற்றும் பீட்டா WhatsApp பயனர்களுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.