அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பணியகத்தின் உதவிச்செயலாளர் டொனால்ட் லூ எதிர்வரும் வாரத்தில் இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.
அவரது விஜயத்தின்போது இடம்பெறவுள்ள கலந்துரையாடல்களில் குறிப்பாக மனித உரிமைகள், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய விடயங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்நாட்டு அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவும் டொனால்ட் லூவுடன் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது அமெரிக்க தூதுக்குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அரச உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.