கல்வி அமைச்சு, கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையில் அதிபர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த அதிபர், அந்தப் பாடசாலையின் ஆசிரியரைக் கண்டித்த சம்பவம் தொடர்பிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த 6ஆம் திகதி தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் சுனில் நவரத்னவின் விரிவுரையைக் கவனமுடன் கேட்கவில்லை என ஆசிரியர் ஒருவரின் கையைப் பிடித்து இழுத்து அமரச் சொன்னதே விசாரணைக்கான காரணமாகும்.
பாடசாலையின் பிரதான மண்டபத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆசிரியையின் கையை அதிபர் இழுத்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர், ஊழியர்களும் மறுநாள் கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகியிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதாக கல்வி அமைச்சு உறுதியளித்ததை அடுத்து அவர்கள் மீண்டும் கற்பித்தலை ஆரம்பித்துள்ளனர்.