14 வயது மாணவி சட்டவிரோத கருக்கலைப்பு – 16 – 17 வயது சிறுவர்கள் கைது
யாழ்ப்பாணத்தில் 14 வயது பாடசாலை மாணவி ஒருவர் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டமை யாழ்.மாவட்ட பெண்கள் சிறுவர் பிரிவினரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவி வலிகாமம் பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகின்ற நிலையிலேயே, இச் சம்பவம் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்து யாழ்.மாவட்ட பெண்கள் சிறுவர் பிரிவினரால் குறித்த பகுதிக்குட்பட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இதனடிப்படையில், குறித்த சிறுமியிடம் பொலிஸாரினால் மேற்க்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த சிறுமியின் முன்னாள் மற்றும் இன்னாள் காதலர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் 16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற உத்தரவின்படி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சட்டவிரோத கருக்கலைப்பு குறித்த மாணவியின் பெற்றோரின் உதவியுடனேயே மேற்க்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.