இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்

ஒரு கிலோ அரிசி 98 ரூபாவுக்கு…

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசியை ஒரு கிலோ 98 ரூபாவுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சதொச நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சுங்க சோதனை நடவடிக்கைகளின் பின்னர் இதுவரையில் நாட்டரிசி அடங்கிய 09 கொள்கலன்கள் தமது நிறுவனத்திற்கு கிடைத்துள்ளதாகவும் நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை விற்பனை செய்யும் நடவடிக்கைகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பு துறைமுகத்தில் காணப்பட்ட சீனி அடங்கிய 81 கொள்கலன்களும் சதொச நிறுவனத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சீனி தொகையை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ், சதொச கிளைகளூடாக மக்களுக்கு வழங்கவுள்ளதாகவும் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button