கொழும்பு -7இல் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையத்தின் இரண்டு எரிபொருள் விநியோக இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பெற்றோல் விநியோகத்தில் மோசடியில் ஈடுபட்டமையினாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி இரு எரிபொருள் விநியோக இயந்திரங்கள் ஊடாக ஒரு லீற்றருக்கு 1.2சதவீதம்( லீற்றருக்கு 5.40 ரூபா) குறைவாக வழங்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, அளவை மற்றும் நிறுவைகள் திணைக்களம், கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகம் என்பன ஒன்றிணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள ஒக்டேன் 92 பெற்றோலை விநியோகிக்கும் மூன்றில் இரண்டு இயந்திரங்கள் ஊடாக உரிய கட்டணத்துக்கான அளவை விட குறைவாக பெற்றோல் விநியோகித்தமை கண்டறியப்பட்டுள்ளது.