இலங்கைசெய்திகள்

உழவு இயந்திரம் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு!!

accident

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட முத்தையன் கட்டுப்பகுதியில் வயல் உழுவதற்காக உழவு இயந்திரத்தினை வீதியால் செலுத்திக்கொண்டிருந்த போது உழவு இயந்திரம் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து விபத்திற்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (13) மாலை முத்தையன் கட்டு எல் வி சந்திப்பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது.

வேகக்கட்டுப்பாட்டினை இழந்த உழவு இயந்திரம் மின் கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதன்போது காயமடைந்த சாரதி மக்களால் மீட்கப்பட்டு ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.

32 வயதுடைய பெரியசாமி ராஜ்குமார் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்ட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான விசாரணையினை ஒட்டிசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Related Articles

Leave a Reply

Back to top button