இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இலங்கையில் மாணவிகளின் அவல நிலை – கல்விக்குத் தடையாக மாறும் சுகாதார துவாய்களின் விலையேற்றம்!!
srilanka
இலங்கையின் பொருளாதார நிலை காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் பாரிய பாதிப்பு ஏ;பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சுகாதாரப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக, மாதவிடாய் காலத்தில் மாணவிகள் பள்ளிக்குச் செல்வது குறைவடைந்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூறுகிறது.
அதன் தலைவர் கலாநிதி சமல் சஞ்சீவ, ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக பாடசாலைகளில் காலை சந்திப்பின் போது மாணவர்கள் மயங்கி விழும் நிலைமை அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.