பச்சைக்குத்தல் கலையை முறையான பயிற்சியின்றி முன்னெடுப்பது ஆபத்தானது எனவும் இலங்கையில் பச்சைக்குத்தல் துறையில் ஈடுபடும் பெரும்பாலானோர், முறையான பயிற்சிகளில் ஈடுபடவில்லை எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
பச்சைக்குத்தலுக்காக பயன்படுத்தப்படும் சாயங்கள் தொடர்பில், முறையான ஒழுங்கு விதிகள் பின்பற்றப்படாமை, மற்றும் அதற்காக பயன்படுத்தப்படும் ஊசிகள் சகலருக்கும் பயன்படுத்தப்படுகின்றமை, போன்ற செயற்பாடுகளால் மனித உடலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் பொது சுகாதார பரிசோதகர் சங்கதின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டார்.
இந்த நிலையில், பச்சைக்குத்தல் துறையில் ஈடுபடுபவர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறு பயிற்சி பெறாத பச்சைக்குத்தல் துறையில் ஈடுபடுபவர்களை கண்டறிய விசேட தேடுதல்களை, மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.