12 வருட ஆராய்ச்சியின் பலனாக காலி – லபுதுவ அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தினால் புதிய நெல் வகை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
மூன்றரை மாதங்களில் அறுவடை செய்யக்கூடிய புதிய நெல் வகையொன்றே இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளது.
‘எல்.டி 376’ எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த நெல் வகையை நாட்டின் எந்தப் பகுதியிலும் பயிரிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.