சுங்க மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் 600க்கும் மேற்பட்டோர் கோடீஸ்வர வர்த்தகர்கள் மற்றும் நலன்விரும்பிகள், வரி வலையில் இருந்து தப்பிப்பதற்கு உதவியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினால்அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட விசேட புலனாய்வு அறிக்கையின் மூலம் இந்த உண்மைகள் தெரியவந்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோசடி அதிகாரிகள் தொடர்பான மேலதிக விபரங்களை வழங்குமாறு புலனாய்வுத் துறைக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இம்மோசடி நடவடிக்கையின் மூலம், வருடாந்தம் பத்தாயிரம் கோடிக்கும் அதிகமான வரியை அரசாங்கம் இழந்து வருவதாக விசேட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.