பங்களாதேஷ் ஒருபோதும் இலங்கை போன்ற ஒரு சூழ்நிலையில் மூழ்காது என அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina) நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
மேலும் அனைத்து உலகளாவிய சவால்களையும் கடந்து தனது நாடு தொடர்ந்தும் முன்னேறும் என்றும் பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பங்களாதேஷ் இன் தேசத் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 47வது தியாக நினைவு தினம் இன்று(30) அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina) மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina) மேலும் தெரிவிக்கையில்,
“பங்களாதேஷ் ஒருபோதும் இலங்கையாக மாறாது. அத்துடன் ஒருபோதும் இலங்கை போன்ற பொருளாதார சூழ்நிலையில் மூழ்காது. அதற்கு பதிலாக நமது நாடு அனைத்து உலகளாவிய சவால்களையும் கடந்து தொடர்ந்து முன்னேறும்.
ஏற்கனவே எதிர்கட்சியின் ஆட்சியில் பங்களாதேஷ் இலங்கை போன்ற சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது எனினும் எமது கட்சி அந்த நிலைமையை மாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாடு அனைத்து உலகளாவிய சவால்களையும் கடந்து தொடர்ந்து முன்னேறும் . பங்களாதேஷ் ஒருபோதும் இலங்கையாக இருக்காது, இருக்க முடியாது என்ற ஒரு விடயத்தை அனைவரும் நினைவு வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina) கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது .