இலங்கையின் கடன் நெருக்கடியைத் தீர்க்கும் வகையில் இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளின் கூட்டம் ஒன்றை கூட்டுவதற்கு ஜப்பான் முன்வந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கு இணங்க ஜப்பான் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனவும் இந்த மாநாட்டைக் கூட்டுவதன் மூலம் ஜப்பானுக்கு இலங்கை ஏற்கனவே வழங்கவேண்டிய 3 பில்லியன் டொலர்களை மீண்டும் பெற்றுக்கொள்ளமுடியும் என்ற நோக்கம் ஜப்பானுக்கு இருக்கலாம் என்றும் கருத்து முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த மாநாட்டுக்கு சீனா ஒத்துழைக்குமா என்பதை பொறுத்தே, ஜப்பானின் ராஜதந்திர வெற்றி உறுதிப்படுத்தப்படும் என்று ஜப்பானிய ஆய்வு இதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
இது ஜப்பானிய அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாதபோதும் உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாகவே வெளியாகியுள்ளது.