விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
மழையின் போது தன் கிராமத்தில் உள்ள ஒரு சாலை மிகவும் சேறும் சகதியுகமாக காட்சி அளிப்பதை பார்த்த சந்திரசேகர், உடனே வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று தன் கிராமத்தில் நிலைவரத்தை எடுத்துக்கூறி சாலை அமைத்து தர வேண்டுமென மனு அளித்தார். இதற்கு அரசு அதிகாரிகள் தற்போது எதுவும் நிதி இல்லை என தெரிவித்தனர். இந்த சாலைக்கு எவ்வளவு செலவு ஆகும் என்று கேட்டுள்ளார்.
இந்த செலவையும் தானே செய்து எனது கிராமத்திற்கு சாலை அமைத்துக் கொள்கிறேன் எனக் கூறினார். இதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டுமென அரசு அதிகாரிகள் தெரிவிக்கவே, அதன்படி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனிடம் அனுமதி பெற்று சுமார் 14 அடி அகலமும் 270 மீட்டர் தூரம் கொண்ட சிமெண்ட் சாலையை சுமார் 10.50 லட்சம் செலவில் தன் சொந்த பணத்தை செலவிட்டு அமைத்துள்ளார். இளைஞர் சந்திரசேகரன் செயலை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் வெகுவாக பாராட்டி நன்றி தெரிவித்து வருகின்றனர்.