யாழ். நல்லூர் திருவிழாவில் கலந்து கொள்ளும் மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பேணி வருமாறு மாநகரசபை கேட்டுக் கொள்கிறோம் என யாழ் மாநகர சபை மேயர் வி.மணிவண்ணன் (V.Manivananan) தெரிவித்துள்ளார்.
நல்லூர் உற்சவத்தின் கடைசி உற்சவங்களான இரத உற்சவம், தீர்த்தோற்சவங்களில் காவடி, பறவைக் காவடிகளிற்கு சிறப்பான ஒழுங்கமைப்புக்கள் செய்யப்பட்டிருக்கிறது.
தூக்குக் காவடி, பறவைக் காவடிகள் பருத்தித்துறை வீதியால் மட்டும் உள் வரலாம் என அறிவிக்கப்படுகிறது. மேற்படி காவடிகள் செட்டி தெரு வீதியில் இறக்கப்பட்டு பக்தர்கள் நடந்து ஆலயத்திற்கு செல்லலாம்.
இதை தொடர்ந்து டக்டர்கள் செட்டி தெரு வீதி ஊடாக செல்ல வேண்டும். இதனை பின்பற்றுமாறு கேட்டு கொள்கிறோம். ஆலயத்திற்கு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக திருட்டுச் சம்பவங்களும் அதிகரித்துக் காணப்படுகிறது.