ஆன்மீகம்செய்திகள்

ஆவணி ஞாயிறுகளிலும் சூரியப்பொங்கல்!!

Avani Pongal

இலங்கையின் ஒவ்வொரு குடிமகனும் 10 இலட்சம் ரூபா கடனாளிகள்.

38 வருடங்களுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட இந்திய இராணுவ வீரரின் உடலம்!

சூரியனுக்கு உகந்த ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் மிகவும் நல்லது என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சூரியனுக்கு சிம்மம் ஆட்சி வீடாகும். ஆவணி மாதம் சூரிய பகவான் சிம்ம ராசியில் இருப்பார்.

அதாவது இந்த மாதம் முழுவதும் சூரியன் தன் சொந்த வீட்டில் இருப்பார். ஆகவே இந்த ஆவணி ஞாயிறு விசேடமானதாக கடைப்பிடிக்கப்படுகின்றது.

தமிழ்நாட்டில் பல இடங்களில் சூரிய பகவானுக்கு சிறப்பு ஆலயங்கள் இருக்கின்றன. இந்த ஆலயங்களில் எல்லாம் ஆவணி மாதங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டதாக குறிப்புகள் உள்ளன.

பழங்காலத்தில் தமிழர்கள் ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபட்டுள்ளனர். வீட்டின் முன்பு வெட்டவெளியில் புதுபானையில் பொங்கல் வைப்பார்கள். தை மாத பொங்கல் நிகழ்ச்சி போன்றே இந்த பொங்கலும் நடத்தப்படும்.

எனவே இந்த பொங்கலை ஆவணி ஞாயிறு பொங்கல் என்று அழைத்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஞாயிறு கிராமம், கொளப்பாக்கம், திருக்கழுக்குன்றம், காஞ்சி கச்சயேஸ்வரர் ஆலயம் ஆகியவற்றில் சூரியனுக்கு சிறப்பான ஆலயமும், சன்னதிகளும் உள்ளன.

ஆவணி ஞாயிறு விரதம் இருந்து பொங்கல் வைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகமாகும்.

Related Articles

Leave a Reply

Back to top button