1. ஜனாதிபதி தனது இருப்பதை தக்கவைத்துக்கொள்வதற்காகவே தமிழ் அமைப்புகளின் தடையை நீக்கியுள்ளார் என்றும், இது தேசத்துரோக செயலாகும் எனவும் தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் குணதாச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
2. கத்தாரின் பிரபல புகைப்பட போட்டியில் சாய்ந்தமருது ஜே. எம். பாஸிதின் புகைப்படமும் தெரிவாகியுள்ளது.
கத்தார் சஃபாரி மால் நடாத்தும் “FRAMES SEASON 5” புகைப்படப் போட்டியில் இலங்கை சாய்ந்தமருதைச் சேர்ந்த இளைஞர் ஜே. எம். பாஸிதின் புகைப்படமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
3. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதம் ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
4. கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை (20) இரவு 11 மணி முதல் மறுநாள் காலை (21) காலை 9 மணி வரை 10 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கொழும்பு 5 மற்றும் 6 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த காலப்பகுதியில் கொழும்பு 4 பிரதேசத்திற்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
5. ரஷ்ய நாட்டில் 10 குழந்தைகள் பெற்றெடுக்கும் தாய்மாருக்கு , ‘அன்னை நாயகி’ என்ற சோவியத் கால பட்டம் வழங்கப்பட்டு குழந்தைக்கு 1 வயது ஆனவுடன் 1 மில்லியன் ரூபிள் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார்.
6. மத்தள சர்வதேச விமான நிலையத்தை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
7. உணவு மற்றும் சுகாதார சேவைக்காக இலங்கைக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் 25 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபை ஊடாக குறித்த நிதியுதவி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.
இந்த நிதியின் ஊடாக மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்துகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
8. இணையத்தளம் ஊடாக சிறுவர்கள் பாலியல் ரீதியான தொந்தரவுக்கு உட்படுத்துபவர்கள் தொடர்பிலான தகவல்களை 1929 என்ற இலக்கத்திற்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி உதயகுமார அமரசிங்க இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
9. எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் முட்டையொன்றின் விலை 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது : அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
10. முட்டைக்கு நிர்ணய விலை – வர்த்தமானி அறிவிப்பு வெளியானது.
11. தேசிய பட்டியல் மூலம் எம்பியாகிறார் கோட்டபாய.
12. பல்கலை அனுமதிக்கு தேசிய அடையாள அட்டை கட்டாயம்.
அன்பு, கருணை, இரக்கம் இவை எல்லாம் மனிதநேயத்தின் பண்புகளாக கொள்ளப்படுகின்றன. ஒரு மனிதன் எவ்வளவு அறிவாளியாக, ஆற்றல் மிக்கவனாக, வீரனாக, விவேகியாக இருந்தாலும் அவனுடைய உள்ளத்தில் மனிதநேயம் இல்லை என்றால் அவன் வாழ்வதிலோ மனிதனாகப் பிறந்ததிலோ அர்த்தமே கிடையாது.
இன்றைய காலத்தில் மனிதநேயம் என்பது அற்றுப்போகும் அபாயம் அதிகளவில் காணப்படுகின்றது. பெருகிவிட்ட முதியோர் இல்லங்களும் சிறுத்துவிட்ட மன விசாலங்களும் அதனையே சொல்கின்றன.
மிருகங்களை மிருகத்தனமாக கொல்லும் அராஜக மனநிலை அதிகரித்துள்ளது. கிளிநொச்சி பகுதியில் புலி ஒன்றைக் கொடூரமாகக் கொன்ற சம்பவம் நாம் எல்லாம் மறந்துசிட முடியாத ஒன்று. இல்லங்களில் அறம் தவறிவிட்ட இன்றைய காலம் இவ்வாறுதான் செய்யத் தூண்டுகிறது. எளியோரை மதித்தல், கண்ணியம் காத்தல், அன்பைக் கொடுத்தல், இல்லாமையில் கொடுத்தல், இயலாமையில் உதவுதல் போன்ற அற உணர்வுகள் மனிதநேயத்தைக் கட்டிக்காப்பவை. அவை முன்னர் ஒவ்வொரு வீடுகளிலும் கற்றுக்கொடுக்கப்பட்டது. இன்று அது அருகிவிட்டது.
நேசம் பெருக்கெடுக்க மற்றவர் துன்பம் பொறுக்க முடியாத உன்னதமான மனிதர்கள் இந்த பூமியில் வாழ்ந்திருக்கிறார்கள். உயர்ந்த ஒழுக்கம், மகத்தான பண்பாடு, துயரத்தில் தோள் கொடுக்கும் அன்பு இவை எல்லாம் நிறைந்திருந்தது எங்களிடம்.
சங்க காலத்தின் வள்ளல்கள் மனித நேயத்தின் சிகரங்களாகப் புகழப்பட்டார்கள். குளிரால் நடுங்கிய காட்டு மயிலுக்கு இரக்கமுற்று தனது போர்வையைக் கொடுத்தான் பேகன். வாடிய முல்லைக்கொடி படர தனது தேரினை ஈந்தான் பாரி. வலிமைமிக்க குதிரைகளை இரவலர்களுக்கு கொடையாக வழங்கினான் காரி. ஒளி மிக்க நீலமணியையும், நாகம் தந்த கலிங்கத்தையும் இரவலர்களுக்கு கொடுத்தான் ஆய். நீண்ட நாட்கள் உயிர் வாழ வைக்கும் அமிர்தமான நெல்லிக்கனியை தான் உண்ணாமல் தனது புலவர் நீண்ட நாள் வாழ்ந்தால் தமிழ் சிறப்புறும் என சிந்தித்து, அதை அவ்வையாருக்கு கொடுத்தான் அதியமான். பசியோடு வாடி வந்த இரவலர்களுக்கு வேண்டிய பொருள் வழங்கி, மன நிறைவு கண்டு மகிழ்ந்தான் நள்ளி. கூத்தாடுபவர்களுக்கு வளமான நாடுகளை வழங்கி மகிழ்ந்தான் ஓரி. இந்திரர் அமிர்தம் கிடைத்தாலும் அது இனிமையானது என தனித்து உண்ணாத தகைமையாளர்களாலும், தமக்கென வாழாமல் பிறருக்கென வாழ்கின்ற சான்றோர்களாலும்தான் இந்த உலகம் அழியாமல் இருக்கிறது என நமது முன்னோர் களின் மனித நேயம் குறித்துக் கூறுகிறது புறநானூறு.
போதை ஊசியால் மூன்றாவது மரணம் சம்பவித்திருக்கிறது யாழ்ப்பாணம் என்று புகழப்படும் கலாசார பூமியில். மனித நேயம் செத்துப்போன மனிதர்களால்தான் அதன் வியாபாரம் செழித்துக்கிடக்கிறது. நாளைய தூண்கள் இன்று , செல்லரித்து இடித்து வீழ்த்தப்படுகின்றார்கள். தமிழ் தலைமைகளின் மனிதநேயம் மரணித்துப் போயிருக்கிறது.
முதியவர்கள் வலிதாங்கி நின்றுகொண்டிருக்க, இளையவர்கள் அரட்டை அடித்தபடி, ஆசனங்களில் அமர்ந்திருந்து பயணிக்கும் அருவருப்பான ஒரு கலாசார மாற்றம் இன்று பிள்ளைகளிடம்.
மடிந்து போன இந்த மனித நேயத்தை எப்படி உயிர்ப்பிக்கப்போகிறோம்? அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒரு விடயமாகும்….
இது ஐவின்ஸ் தமிழ் ஆசிரியர் பீடத்தின் ஒரு பிரத்தியேக தயாரிப்பு ஆகும்.