ஒரு லீற்றர் பெற்றோல் 250 ரூபாவிற்கு வழங்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை மிகவும் குறைந்து வருவதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், 120 டொலராக இருந்த பீப்பாய் தற்போது 92 டொலர்களாக குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.