இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

நியாயமான குரல்களை அடக்குவதற்கா அவசரகாலச் சட்டம் – ஐ.நா நிபுணர்கள் கேள்வி!!

U.N

இலங்கையில் மீண்டும் மீண்டும் அவசரகாலச் சட்டம் விதிக்கப்படுவது பொருளாதார நெருக்கடிக்கு எதிராக எழுப்பப்படும் நியாயமான குரல்களை அடக்குவதற்கே பயன்படுகிறது என ஐ.நாவின் மனித உரிமை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

கோட்டபாயவின் பதவி விலகலைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றார்,  இருப்பினும் அவசரகாலச் சட்டம் என்பது மீண்டும் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. 

பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காணுவதை விட்டுவிட்டு அவசரகாலச் சட்டம் அமுல்படுத்துவது பேசுவதற்கு வழி இல்லாமல் செய்துவிடும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பாதுகாப்புப் படை மற்றும் இராணுவத்தினருக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மக்களுக்கு பாதகத்தினையே ஏற்படுத்தும்,  ஆகே, பேச்சு சுதந்திரம்,  கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளித்து திறந்த உண்மையான பேச்சுக்களுக்கு இடமளிக்குமாறு அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். 

Related Articles

Leave a Reply

Back to top button