இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
சீன கப்பல் விவகாரத்தால் அமெரிக்க- இலங்கை உறவில் விரிசல்!!
America- srilanka
அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ள ‘யுவான்5’ கப்பல் விவகாரத்தால் அமெரிக்கா கடும் எதிர்ப்பு வெளியிடவுள்ளது எனக இராஜதந்திர வட்டாரங்களால் கூறப்படுகிறது,.
அமெரிக்க தூதுவர் ஜூலிசாங் நாளை இந்த ஆட்சேபனையை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இராஜதந்திர மொழியில் டிமாஷ் எனக்கூறப்படும் இச்சம்பவம் இலங்கையில் முதல் தடவையாக நிகழும் எனவும் அவ்வாறு நிகழ்ந்தால் அது இலங்கை – அமெரிக்க உறவில் பாதக நிலையை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியில் பின்னடைவு ஏற்படலாம் எனவும் ஜெனீவாவில் இலங்கைக்கு பாதகமான நிலை உருவாகலாம் எனவும் அவர்களால் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்த கப்பல் விவகாரத்தில் எதிர்ப்பு வெளியிட்டுள்ள இந்தியா, சீனாவுக்கு தெளிவான செய்தி ஒன்றை வழங்கவுள்ளது எனவும் கூறப்படுகிறது.