வடமாகாணத்திற்கான எரிபொருள் இறக்குமதியைப் பிரத்தியேகமாக்க அனுமதி வழங்கவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜசேகர தெரிவித்துள்ளார்.
எரிசக்தி அமைச்சர் மற்றும் வடமாகாண எரிபொருள் நிரப்பு இணையத்தினர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வடமாகாணத்திற்கு பல மாதங்களாக மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை என்பது குறித்தும் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வடமாகாணத்திற்காக எரிபொருள் இறக்குமதி செய்யப்படும் போதிலும் விலை குறைக்க முடியாது எனவும் நாட்டில் தீர்மானம் செய்துள்ள நிலையிலேயே விற்பனை செய்ய முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.