இலங்கைசமீபத்திய செய்திகள்செய்திகள்
சமஷ்டியை ஏற்படுத்துங்கள் , நீங்களும் நாங்களும் இணைந்து நாட்டை முன்னேற்றுவோம் – சபையில் கஜேந்திரகுமார் தெரிவிப்பு!!
Kajentrakumar ponnampalam

சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்துங்கள், நாங்களும் நீங்களும் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவோம் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அவசரகால இடர் குறித்த ஒன்றுகூடலின் போதே இதனைத் தெரிவித்துள்ள அவர், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்ற கோட்டபாய ராஜபக்ஷவையே மக்கள் விரட்டியடித்துள்ளனர். தேர்தலுக்குச் செல்வதன் மூலமே சரியான தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் நம்பிக்கையான ஆட்சியை மக்களிடம் கையளிக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.