இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை – முன்னெடுப்பதில் சிக்கலா!!

fuel

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட 25 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடந்த தினங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. அதன்படி, இன்று முதல் தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை நாடு முழுவதும் அமுலாகும் வகையில் செயற்படுத்தப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேற்றைய தினமும் வாகன இலக்க தகடுகளின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்ட நிலையில், தமது இலக்கங்களுக்குரிய தினங்களில் எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் குற்றஞ் சுமத்துகின்றனர்.

இந்நிலையில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையை நாடு முழுவதும் செயற்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படும் எனவும் அதனை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்படலாம் எனவும் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Back to top button