திறந்த கணக்குகள் மூலம் அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சந்தையில் பொருட்களுக்குத் தட்டுப்பாடு இல்லை எனவும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.