கட்டுரை

இந்த நூற்றாண்டின் மகா அதிஸ்டசாலி ! யார் இந்த ரணில்?ஒரு வரலாற்று பார்வை.

Ranil

1981 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின்படி, நிறைவேற்று ஜனாதிபதி பதவிக்கு பதில் ஜனாதிபதியும் பிரதமருமான கௌரவ ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார்.

1949 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி கொழும்பு குருந்துவத்தையில் பிறந்த ரணில் ஸ்ரீயான் விக்ரமசிங்க கொழும்பு ரோயல் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார்.

1970 ஆம் ஆண்டு மத்தியில் களனி தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம அமைப்பாளராக தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த ரணில் விக்ரமசிங்க, பின்னர் பயகம தொகுதியின் பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பியகம தொகுதியில் போட்டியிட்டு தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.

அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெ. ஆர். ஜயவர்தன அரசாங்க அமைச்சரவையில் இளைய அமைச்சராக இருந்தார்.

ஜே. ஆர். ஜயவர்தன மற்றும் ரணசிங்க பிரேமதாச ஆகிய ஜனாதிபதிகளின் அரசாங்கங்களில் பிரதி வெளிவிவகார அமைச்சராகவும், கல்வி அமைச்சராகவும், இளைஞர் விவகாரம் மற்றும் பாதுகாப்பு அமைச்சராகவும், கைத்தொழில் அமைச்சராகவும் ரணில் விக்கிரமசிங்க பெரும் பங்காற்றினார்.

மஹரகம தேசிய கல்வி நிறுவனம் மற்றும் கல்வி ஆணைக்குழுவை நிறுவுவதற்கு அவர் தலைமை தாங்கினார், கைத்தொழில் அபிவிருத்தி சட்டத்தை கொண்டு வந்தார், தொழிற்சாலைகளுக்கு ஐந்தாண்டு வரிச்சலுகைகளை வழங்கினார், மற்றும் தொழில்துறை ஆணைக்குழுவை நியமித்தார்.

1989ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6ஆம் திகதி முதல் 1993ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் திகதி வரை நாடாளுமன்றத் தலைவராகவும் பணியாற்றிய ரணில் 1994 முதல் 2001ஆம் ஆண்டு வரை மற்றும் 2004 முதல் 2015ஆம் ஆண்டு வரை இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றினார்.

இலங்கையின் பிரதமராக 1993 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் திகதி முதன்முதலில் தெரிவு செய்யப்பட்ட அவர், 1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி வரை அப்பதவியில் இருந்தார்.

ரணில் இலங்கையின் பிரதமராக 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதி முதல் 2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வரை இரண்டாவது முறையாகவும், 2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி முதல் 2015ஆம் ஆண்டு ஒகஸ்ட் 21ஆம் திகதி வரை மூன்றாவது முறையாகவும், 2015ஆம் ஆண்டு ஒகஸ்ட் 24ஆம் திகதி முதல் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி நான்காவது முறையாகவும் 2018ஆம் ஆண்டு டிசம்பர் 16 முதல் 2019ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதி வரை ஐந்தாவது முறையாகவும் செய்யப்பட்டார்.

அதன் பின்னர், இந்த ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர், அதே மாதம் 12 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்று, அந்த பதவியில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

ஜனாதிபதி, கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பின்னர் அரசியலமைப்பின் படி, அவர் கடந்த 14ஆம் திகதி முதல் பதில் ஜனாதிபதியாகவும் பதவியேற்றார்.

பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாடு சீர்குலைந்து கொண்டிருந்த வேளையில், கடந்த மே மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமரானார்.

இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற புதிய ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மையான மக்கள் பிரதிநிதிகளை வெற்றி பெற்ற ணில் விக்ரமசிங்க இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக நாளை பதவியேற்கவுள்ளார்.

இதன்படி, பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் ஸ்திரமின்மைக்கு முகங்கொடுத்துள்ள இலங்கையை காப்பாற்றி பாதுகாப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க இம்முறை கடும் சவாலுடன் நாட்டை பொறுப்பேற்பார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை வரலாற்றில் வெரும் 30ஆயிரம் வாக்குகளை மாத்திரம் பெற்று ஜனாதிபதியான பெறுமைக்கும் சாதனைக்கும் ரணில் சொந்தக்காரராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Articles

Leave a Reply

Back to top button