நோர்வூட் பிரதேச சபையின் இ.தொ.கா உறுப்பினர் சூசை அலக்ஸாண்டர் எரிவாயு வரிசையில் நிற்கும் பொது மகன் ஒருவரை அச்சுறுத்தி, தாக்க செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், அவர் மீது விசாரணை நடைபெறும் எனவும், அதுவரை கட்சியில் இருந்து இடைநிறுத்துவதாகவும் இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
“நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர் சூசை அலக்ஸாண்டர் மீது எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில்,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட ஒழுக்காற்று குழு, எதிர்வரும் 21ஆம் திகதி (வியாழக்கிழமை) உரிய விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.
இதுபோன்ற செயல்களுக்கு இ.தொ.கா ஒருபொழுதும் அனுமதியளிக்காது என்பதோடு குறித்த பிரதேச சபை உறுப்பினரின் சகல கட்சி உறுப்புரிமைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை தெரிவித்துக்கொள்கிறேன் என ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.