
கோத்தாபய ராஜபக்ஷ, மாலைதீவின் பிரதமருக்கு நெருக்கமான வர்த்தகர்க்கு உரித்தான ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் கடும் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாலைதீவில் கோட்டாவிற்கு எதிராக வெடித்த போராட்டத்தை அடுத்து அவர் சிங்கப்பூர் செல்லவுள்ளதாகவும் இன்று இரவிற்குள் அவர் வெளியேறிவிடுவார் எனவும் கூறப்படுகின்றது.
மாலைதீவில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அடைக்கலம் கொடுத்தமைக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் அதிகளவான இலங்கையர்களும் பங்கேற்ற நிலையில் பொலிசார் குவிக்கப்பட்டு பதாதைகள் பறிக்கப்பட்டதுடன் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.