இன்றும்(8), நாளையும் (9) கொழும்பில் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படும் நிலையில் நாட்டை முடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பை முற்றுகையிட்டு பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதால் பல்கலைக்கழக மாணவர்கள், எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இன்று கொழும்பை நோக்கி வரவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன் விளைவுகள் மோசமானால் நாட்டை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் எனத்தெரிவிக்கப்படுகின்றது.