வரலாற்றுப் பிரசித்திபெற்ற நயினாதிவு ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மரபுவழி அறங்காவலரும் வாழ்நாள் தலைவருமான கா. ஆ. தியாகராசா {வயது 84} காலமானார்.
நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் – நல்லூரிலுள்ள அவரின் இல்லத்திலேயே அவர் காலமானார். இவரின் இறுதிக்கிரியைகளை நயினாதீவில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அன்னார் , உதவி அரசாங்க அதிபராக சேவையாற்றி ஓய்வுபெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.