இலங்கைக்கு 3 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்களை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்ட விடயத்தை மைத்திரிபால சிறிசேனவிடம் குறிப்பிட்டுள்ளார்.