இலங்கையர் அல்லாதோர் இலங்கையர் ஒருவரைத் திருமணம் செய்யும் போது வழங்கப்படும் ஒரு வருடத்திற்கான விசா கால எல்லையை நீடிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.
அதற்கமைய, குறித்த விசாகால எல்லையானது 5 வருடங்களாக அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
*இந்த நடைமுறை ஜூலை 4ஆம் திகதி அமுலுக்கு வரும்* எனவும் அமைச்சர் தம்மிக்க பெரேரா” தெரிவித்துள்ளார்.