தமிழ் அரசியல் வாதியால் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பெரும் பனிப்போர்
பிரபல தமிழ் அரசியல் வாதி ஒருவரினால் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பெரும் களேபேரம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் அரசியல் வாதி ஒருவர் சொல்வதைக்கேட்டே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ முடிவெடுப்பதாகவே கட்சிக்குள் முரண்பாடு வெடித்துள்ளது.
நல்லாட்சிக்காலத்திலும் ரணில்விக்கிரம சிங்கவின் முடிவுகளிலும் குறித்த தமிழ் அரசியல்வாதி செல்வாக்கு செலுத்தி வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கியமக்கள் சக்திக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு கட்சியை விட்டு இன்னும் பல முக்கியஸ்தர்கள் கட்சியை விட்டு வெளியேறி கட்சி பிளவுபடுவதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதாகவும் கொழும்பு அரசியல் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியமான அரசியல் வாதிகளான ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோர் அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொண்டமையும், சம்பிக்க ரணவக்க சுயாதீனமாக செயற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய மக்கள் சக்திக்குள் ஏற்பட்டுள்ள பனிப்போர் சில நாட்களில் பெரும்போராக வெடித்து கட்சிக்குள் பாரிய பிளவுகள் ஏற்படலாம் எனவும் கொழும்பு அரசியல் தகவல்கள் குறிப்பிடுகின்றன.