இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கைக்கு எதிராக வெளிநாடொன்றில் வழக்குத் தாக்கல்!!

Case

இலங்கைக்கு எதிராக நிவ்யோர்க் பிராந்திய நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 25 ஆம் திகதி முதிர்ச்சியடையும் பிணை முறிகளுக்கான கொடுப்பனவை செலுத்த தவறுகின்றமை தொடர்பிலேயே பிணை முறிக்கு உரித்துடைய தரப்பு இந்த வழக்கினைத் தொடர்ந்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை கருத்திற்கொண்டு வெளிநாட்டு கடன்களை தற்காலிகமாக செலுத்த முடியாது என மத்திய வங்கி அறிவித்திருந்தது.

இதற்கு எதிராக இலங்கையின் 250 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பிணை முறிகளை கொண்டுள்ள ஹமில்டன் வங்கியினால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்ட பிணை முறிகளின் முழுத்தொகையையும் வட்டியுடன் செலுத்தக் கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் மொத்த பிணை முறிகளின் 5.875 சதவீதத்தை இந்த நிறுவனம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button