இலங்கைசெய்திகள்

அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் இலங்கை வருகை!!

Australian Home Secretary

அவுஸ்திரேலிய புதிய அரசாங்கத்தின் விசேட பிரதிநிதி ஒருவர் இலங்கைக்கு வருகிறார்.

அந்தநாட்டில் தேர்தல் நடைபெற்று புதிய அரசாங்கம் தெரிவானதன் பின்னர், இலங்கையில் இருந்து பல படகுகளில் ஏதிலிகள் சென்றுள்ளனர்.

அவர்கள் அனைவரும் எல்லையில் தடுக்கப்பட்டு அவுஸ்திரேலிய அதிகாரிகளால் நாடுகடத்தப்படுகின்றனர்.

இந்தநிலையில் படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு பிரவேசிக்கின்ற அனைவரும், அங்கு குடியேற்றப்பட மாட்டார்கள் என்றும் அவர்கள் உடனடியாக நாடுகடத்தப்படுவார்கள் என்றும் செய்தியை வழங்கும் வகையில், அவுஸ்திரேலியா தமது உள்துறை அமைச்சர் க்ளெயார் ஓநீலை இலங்கைக்கு அனுப்புகிறது.

இன்று இலங்கை வருகின்ற அவர், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடுவார்.

இதன்போது இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அவுஸ்திரேலியாவால் எவ்வாறு உதவ முடியும் மற்றும் ஏதிலிப் படகுகளைத் தடுப்பதற்கான வழிகள் குறித்து அவதானம் செலுத்துவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button