கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் இன்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் நடாத்திய Zoom கூட்டத்தில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
அருகிலுள்ள பாடசாலைக்குச் செல்ல ஆசிரியர்களுக்கு அனுமதி இல்லை. தமக்குரிய பாடசாலைக்கே செல்ல வேண்டும்.
பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக உரிய பாடசாலை செல்ல முடியாத ஆசிரியர்கள் வீட்டில் இருந்து Online மூலம் கற்பிக்க வேண்டும்..!
மாணவர்கள் விரும்பினால் அருகிலுள்ள பாடசாலைக்குச் செல்லலாம்.
இந்த தீர்மானங்களுக்கு அமைவாகவே கிழக்கு மாகாணத்தில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.