இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
80 சதவீத சிறிய – நடுத்தர சிற்றுண்டிச்சாலைகள் பூட்டப்பட்டது!!
restaurants closed
80 சதவீத சிறிய மற்றும் நடுத்தர சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய சுயத்தொழில் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில், அதன் தலைவர் பிரதீப் சார்ள்ஸ் கருத்துரைக்கையில், எரிவாயு தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு சிற்றுண்டிச்சாலைகள் பூட்டப்பட்டுள்ளன, அதனால் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்தது.
இதனால் அவர்களது குடும்பத்தினர் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
தற்போதும், எரிவாயு கிடைக்காமையினால் பலர் தமது தொழிலைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் ஐக்கிய தேசிய சுயத்தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் பிரதீப் சார்ள்ஸ் குறிப்பிட்டுள்ளார்.