இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்தி யிருந்தார்.
இந்த நிலையில் அவரது உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் வைத்தியர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.